திருமூர்த்தி மலை பூங்கா இனி, ஏ.ஐ., டிசைனில்!
பஞ்சலிங்க அருவியின் சாரல், திருமூர்த்தி அணையின் அமைதி, அமணலிங்கேஸ்வரரின் வரலாற்று பெருமை... இப்படி இயற்கையும் ஆன்மிகமும் ஒன்றாக கைகோர்த்து நிற்கும் திருப்பூர் மாவட்டத்தின் முகவரி தான் திருமூர்த்தி மலை.
தினமும் உள்நாடு, வெளிநாட்டு பயணிகள் குவியும் இந்த சுற்றுலா தலம், இப்போது அடுத்த கட்டத்துக்கு தயாராகிறது. சர்வதேச தரத்தில் மின்னப் போகிறது.
தமிழக அரசு 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, திருமூர்த்தி மலையில் பூங்கா மற்றும் நவீன மேம்பாட்டு பணிகளை தொடங்க உள்ளது. இது வழக்கமான சிமென்ட், கான்கிரீட் பூங்கா இல்லை. இந்த முறை சுற்றுலா வளர்ச்சி கழகம் கையில் எடுத்திருப்பது ஏ.ஐ. தொழில்நுட்பம்.
திருமூர்த்தி அணையின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது, நீர்வரத்து எப்படி, சுற்றியுள்ள நிலப்பரப்பின் தன்மை என்ன, சுற்றுலா பயணிகளை மேலும் கவர என்னென்ன புதிய அம்சங்களை சேர்க்கலாம், பொழுதுபோக்கு மட்டுமல்ல, அடிப்படை வசதிகள், பாதுகாப்பை எப்படி மேம்படுத்தலாம் என்பதை எல்லாம் ஏ.ஐ.யை வைத்து அலச உள்ளனர்.
இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ள உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களின் சிறந்த கட்டமைப்புகளை ஒப்பிட்டு, அதுபோல் திருமூர்த்தி அணை பகுதியில் என்ன செய்ய முடியும், பூங்காவின் டிசைன், நிலப்பரப்பு பயன்பாடு, கூட்ட நெரிசலை சமாளிப்பது, கட்டமைப்பு திட்டமிடுதல் என ஒவ்வொன்றிலும் செயற்கை நுண்ணறிவின் ஆலோசனை பெறப்பட உள்ளது என்கின்றனர் சுற்றுலாத்துறையினர்.
மனித அனுபவமும், ஏ.ஐ.யின் துல்லியமான டேட்டா ஆய்வும் ஒன்று சேரும் போது, ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாய்க்குள் திருமூர்த்தி மலை, பயணிகளை அசரடிக்கும் சுற்றுலா தலமாக மாறும் என்பது, அவர்களின் நம்பிக்கை.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'