போலியோ இல்லாத இந்தியா விழிப்புணர்வு ஊர்வலம்
திருப்பூர்: ரோட்டரி திருப்பூர் லட்சுமி நகர் சார்பில், போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்து, போலியோ ஒழிக்கப்பட்டது எப்படி, என்பது குறித்து விளக்கி,‘‘ நம் நாட்டில், கடந்த, 2014-ல் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்’’ என்றார்.
சுகாதார ஆய்வாளர், அலுவலக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய டி–ஷர்ட் வழங்கப்பட்டது. ‘போலியோவை ஒழிப்போம், சொட்டு மருந்து கொடுப்போம்’ என கோஷமிட்ட படி, ரோட்டரி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலம் சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement