குப்பையில் கிடந்த ஆதார் அட்டைகள் பெண் தபால் ஊழியர் சஸ்பெண்ட்

பல்லடம்: பல்லடத்தில், குப்பையில் ஆதார் அட்டைகள் வீசப்பட்டது தொடர்பாக, தபால் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருப்பூர், பல்லடம், அறிவொளி நகர் குப்பை கிடங்கில், இரு நாளுக்கு முன் நுாற்றுக்கணக்கான ஆதார் அட்டைகள், குப்பையில் கிடந்தன. அதிகாரிகளின் விசாரணையில், ‘அவை அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் ‘டெலிவரி’ செய்யப்பட வேண்டியவை’ என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, அவிநாசி துணை தபால் நிலையத்தை சேர்ந்த பெண் தபால் ஊழியர் ஒருவர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.

திருப்பூர் தபால் துறை மக்கள் தொடர்பு அலுவலர் பிரதீஷ் கூறுகையில், ‘‘குப்பையில் கிடந்த ஆதார் அட்டைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளன. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியரிடம் விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

Advertisement