மாயனுார் கதவணையில் மீன் விற்பனை ஜோர்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது.

இதில் சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன்களை பிடித்து கொண்டுவந்து, கட்டளை வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர்.
தற்போது, பருவ மழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்கள் வரத்து அதிகம் உள்ளது. நேற்று நடந்த விற்பனையில், ஜிலேபி மீன் ஒரு கிலோ, 130 ரூபாய், கெண்டை, 100 ரூபாய், கொக்கு மீன், 240 ரூபாய், பாறை மீன், 200 ரூபாய், விரால், 650 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று விடுமுறை என்பதால், 300 கிலோ வரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.

Advertisement