வாட்ஸ் ஆப் குரூப்பில் பொய் தகவல் எஸ்.பி.,யிடம் லாரி உரிமையாளர் மனு

ஈரோடு: மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ் தலைமை யில், ஈரோடு எஸ்.பி.,யிடம் அளி த்த மனுவில் கூறியிருப்பதாவது:

'சேண்ட் ஒன்லி' என்ற வாட்ஸ் ஆப் குரூப்பின், சங்க தலைவரான எனக்கு எதிராக பொய்யான, அவதுாறான, இழிவான மற்றும் தீய நோக்கத்துடன் கூடிய கருத்துகளை ஈரோடு, லக்காபுரம் போக்குவரத்து நகரை சேர்ந்த செந்தில் என்பவர் பரப்பி வருகிறார். லாரி உரிமையாளர்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை என்றும், நான் உயிருடன் இருக்கும் போதே, இறந்து விட்டதாக பொய்யான, தவறான எண்ணத்துடன் குழப்பம் ஏற்படும் வகையில், செய்திகளை வாட்ஸ் ஆப்
குரூப்பில் பதிவிடுகிறார். இதனால் சங்கத்தில் தேவையற்ற குழப்பம், பிரச்னை ஏற்படுகிறது. எனவே, வாட்ஸ் ஆப் குரூப்பில் பொய்யான தகவல்களை பரப்பி வரும், செந்தில் மீது வழக்கு பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Advertisement