டிரிப் 'கட்' டாகும் பஸ்களால் காத்திருக்கும் பயணியர்
சோழவந்தான்: சோழவந்தான், திருமங்கலம் பஸ்கள் முறையாக இயக்கப்படாததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது.
சோழவந்தான், திருமங்கலம் இடையே 'எல் 4' எனும் வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. முன்பு சரியான நேரத்திற்கு இயங்கிய பஸ்கள் தற்போது சரியான நேரத்திற்கு வருவதில்லை. பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
சமூக ஆர்வலர் கவுரிநாதன் கூறியதாவது: வாடிப்பட்டி – திருமங்கலம் பஸ்நிறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிகாரிகள் கூறியதாவது: சோழவந்தான் டிப்போவிலிருந்து இவ்வழித்தடத்தில் பஸ்கள் முன்பு இயங்கின. சில ஆண்டுகளுக்கு முன் செக்கானுாரணி டிப்போவில் பஸ்கள் ஒப்படைக்கப்பட்டு இயங்குகின்றன. ஊழியர்கள் பணி மாறும் நேரங்களில் விரைந்து பணி முடித்துச் செல்ல பாதி வழியில் செக்கானுாரணியோடு டிப்போவுக்கு திரும்புகின்றனர்.
இதனால் திருமங்கலம், சோழவந்தானில் பயணிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றனர். இந்த பஸ்களை மீண்டும் சோழவந்தான் டிப்போவில் இருந்து இயக்கினால் பிரச்னைக்கு தீர்வு காணலாம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்