குடியிருப்புகளில் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம், அருந்ததி நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதி வழியாக வரும் மழை ஓட வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் புகுந்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழைநீர் தடையின்றி ஓட சாத்திப்பட்டு–சி.என்.பாளையம் சாலையில் புதியதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக மழைநீர் வெளியேறும் வாய்க்கால் சரியாக துார்வாராததால் மழைநீர் தடையின்றி ஓட வழியில்லாததால் நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.
மேலும் பல குடியிருப்புகுளை சுற்றி மழைநீர் சுழ்ந்ததால் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதியடைந்தனர். ஒவ்வொரு மழைகாலத்திலும் இது தொடர் கதையாகவே உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அகலப்படுத்தி துார் வாரிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சி.என்.பாளையம், எம்.ஜி.ஆர்.,நகர் பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்கால் அடைப்பால் தண்ணீர் வெளிவரமுடியாததால் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மேலும்
-
கைகொடுக்கும் மொழி... ஆர்வம் தான் வழி! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
-
பல நாடுகளில் இது தேர்தல் காலம்
-
வேலை உறுதி திட்ட பணிகளை நிறுத்த எதிர்பார்ப்பு : விவசாய பணிக்கு உதவ விவசாயிகள் வேண்டுகோள்
-
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மின்தடையால் பயணிகள் அவதி: தனி 'டிரான்ஸ்பார்மர்'கள் அமைக்க வலியுறுத்தல்
-
'உணவு சந்ததை'யில் சாம்பார், குருமாவுக்கு 'மவுசு' இட்லி, சப்பா த்தியைவிட 'சை டிஷ்' விலை அதிகம்
-
சூதாடிய 8 பேர் கைது