புறவழிச்சாலையில் கல்வெர்ட்டுகள் அடைப்பு வயல்வெளியில் மழைநீர் தேங்கும் அவலம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீரனுார் புறவழிச் சாலையில் இருந்த கல்வெர்ட்டுகள் அடைக்கப்பட்டதால், வயல் வெளியில் மழைநீர் குளம் போல் தேங்கி விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
ஆற்காடு – துாத்துக்குடி சாலை அமைக்கும்போது திருக்கோவிலுார் தபோவனத்தில் தென்பெண்ணை ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு கீரனுார் வழியாக அரும்பாக்கம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.
அப்போது தென்பெண்ணை ஆற்றின் உயர்மட்ட பாலம் முடியும் பகுதியில் இருந்து கீரனுார் வரை விவசாயத்திற்காக சென்ற வாய்க்கால்கள் பாதிக்காமலும், மழைநீர் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க 5க்கும் மேற்பட்ட கல்வெர்ட்டுகள் கட்டப்பட்டது.
தற்போது, புறவழிச் சாலையின் இரண்டு பகுதிகளிலும் கடை மற்றும் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் மற்றும் மழைநீர் செல்வதற்கான கட்டப்பட்ட 3 கல்வெர்ட்டுகளை அடைத்து விட்டனர்.
இதனால், தற்போது பெய்து வரும் மழை நீர் கீரனுார் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் குளம் போல் தேங்கி, விவசாய பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் சம்பா நடவுக்கான நாற்றங்கால் தயார் செய்து, நடவு பணியை துவங்க தயாராகி வரும் விவசாயிகள், வயலில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்பதால் விவசாய பணியை எப்படி மேற்கொள்வது என தெரியாமல் தவிக்கின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மூடப்பட்ட கல்வெர்ட்டுகளை திறந்து, வயல்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
கரூர் அருகே அக்ரஹாரத்தில் தார்ச்சாலை சேதத்தால் அவதி
-
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் கட்டளை கிராமத்தில் கலெக்டர் ஆய்வு
-
வெற்றி பயணம் திட்டத்தால் உள்ளூர் வணிகம் பாதிக்கப்படுமே?: அந்துமணி பதில்கள்!
-
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
-
பறவைகள் சரணாலயத்தில் அமைச்சர் ஆய்வு
-
படித்துறையில் துாய்மை பணி களமிறங்கிய தன்னார்வலர்கள்