6 மாதத்தில் 23 மரண தண்டனை வழங்கிய நீதிபதி இடமாற்றம்

முசாபர்நகர்: ஆறு மாதங்களில், 23 மரண தண்டனை வழங்கிய, கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவி குமார் திவாகர், குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகர் விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் ரவிகுமார் திவாகர். ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான ஆறு மாதங்களில், 11 வழக்குகளில் 23 மரண தண்டனையை நீதிபதி திவாகர் அளித்திருந்தார்.

மேலும், கொலை மற்றும் தீவிர குற்றங்கள் தொடர்பான 97 வழக்குகல்லை தன் நீதிமன்றத்தில் இருந்து அப்போதைய மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி பி.கே.சிங் திரும்ப பெற்றது குறித்தும் திவாகர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், நீதித்துறை சுதந்திரம் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் நிர்வாக அதிகார எல்லை குறித்துக் கவலை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், நீதிபதி ரவிகுமார் திவாகரை, குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக சிவகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement