ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

புதுச்சேரி: இடையார்பாளையம் நாணமேட்டில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் இன்று (அக்.,25) நடந்தது. இதையொட்டி, ஜலகண்டேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது.

பின், 100 கிலோ அரிசி மற்றும் 70 கிலோ காய்கறிகள் பயன்படுத்தப்பட்டு, அன்னாபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement