ரூ.113 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்பு

சென்னை: ‘கோவில் நிலம் தொடர்பாக, இதுவரை, 999 வழக்குகள் முடிக்கப்பட்டு, கோவில்களுக்கு சொந்தமான, 113 கோடி ரூபாய் மதிப்பிலான, 105.14 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன’ என, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், 16,657.69 ஏக்கர் கோவில் நிலங்களை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், 12,373 ஏக்கர் நிலங்களில், எல்லை கற்கள் நடும் பணி நடந்து வருகிறது. அறநிலையத்துறை சட்டத்தின் கீழ், இதுவரை, 999 வழக்குகள் மற்றும் இணை ஆணையர்கள் மன்றத்தில், 78 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, கோவில்களுக்கு சொந்தமான, 113 கோடி ரூபாய் மதிப்பிலான 105.14 ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு, சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement