தேர்தலில் தோற்றுப் போனவர்களை நாங்கள் ஏன் பழி வாங்க வேண்டும்; அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி
சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி: த.வெ.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்கின்றனர். தி.மு.க., ஆட்சியில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மூடி மறைக்கப்பட்டன. சில வழக்குகள், நீதிமன்றம் சென்ற பின்பே சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டன. 'கிரானைட்' வீரமணி வழக்கிலும், இரண்டு ஆண்டுகள் கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது. ஆனால், த.வெ.க., ஆட்சியில், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தவறு செய்திருந்தால், அவர்களை கேள்வி கேட்கக் கூடாது என நினைக்கின்றனர். முன்னாள் அமைச்சர் மகேஷ் தரப்பினர், நுாற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகத்தினர் மிரட்டி, நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயை கட்சி நிதியாக வசூலித்துள்ளனர். பள்ளி குழந்தைகள் பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளனர்; இது வெட்கக்கேடானது. தி.மு.க.,வுக்கு பயந்து, இன்னும் பல கல்வி நிறுவனத்தினர் புகார் அளிக்காமல் உள்ளனர்.
யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. திமுகவினருக்கு தேர்தலில் மக்களே தீர்ப்பளித்து விட்டனர். தேர்தலில் தோற்றுப்போனவர்களை நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? நீதிமன்ற தடை விலகியதால், முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை 'ரெய்டு' நடந்தது. தமிழகத்தில், அடுத்த மூன்று மாதங்களில், சிறைத்துறை நிர்வாகம் முழுமையாக சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தவக்காவுக்கு பாஜவே தேவலாம்.
ஒருவரது தந்தை இறந்துவிட, மகன் அரசு மின்சார சிதைக்கு எடுத்துச்செல்ல, அங்கு மின்சாரம் இல்லாமல், அந்த மகன் அரசு நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்திய பிறகும் எதுவும் நடக்காத நிலையில், அந்த நல்மகன் தன் சொந்த செலவில் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து மின் எரியூட்டி பெற்றவருக்கு தன் கடமையை செய்து முடித்தார். ஆனால் அதிகாரிகள் ஜெனரேட்டரை வைத்து காரியம் செய்துவிட்டதாக பதிவு வெளியிட்டு பெயர் தேடிக்கொண்ட அந்த ச்சார் யார் என்று யாருக்காவது தெரியுமா?
இன்னும். மூன்று மாதத்துக்குள், புழல், கோவை. என்று. எல்லா. சிறைகளிலிருந்தும். கைதிகள். ராஜ நடை போட்டு. தப்பிச் செல்வார்களா?மேலும்
-
'டேப்' ஒட்டிய விமான ஜன்னல்; பாதுகாப்பில் அலட்சியத்தை கண்டு ஸ்பைஸ்ஜெட் விமான பயணி ஆவேசம்
-
நாக்பூரில் வென்று கணக்கை துவக்கியது காங்கிரஸ்: கர்நாடகா, உ.பி., மேல்சபை தேர்தலில் பா.ஜ., ஆதிக்கம்
-
சிறப்பாக பணியாற்றிய ஊழியருக்கு சொகுசு கார் பரிசு வழங்கிய துபாய் நிறுவனம்
-
வன்முறையில் ஈடுபட்டால் அரசு வேலை கிடையாது; விதிகளை கடுமையாக்கியது உ.பி., அரசு
-
கத்தார் செல்லும் விமானத்தில் கோளாறு; கடைசி நிமிடத்தில் பயணம் ரத்து
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்; 13 பேர் பலி