சுற்றுலா வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம்

திருமங்கலம்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 20 பேர் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் சுற்றுலா செல்ல கடந்த வெள்ளிக்கிழமை வேனில் புறப்பட்டனர். வேனை அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் இர்பான் ஓட்டினார்.

இன்று (அக்.,25) காலை கன்னியாகுமரி சென்று விட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்ல வந்தனர். மதுரை – திருமங்கலம் நான்கு வழிச்சாலை தோப்பூர் அருகே மழை காரணமாக பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த வேன் நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் சின்ன பாப்பு 60, மலர்க்கொடி 27, சந்திரசேகர் 44, வெண்டா 58, ஜஸ்வின் 5, உட்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்களை நெடுஞ்சாலை மீட்பு பிரிவினர் மற்றும் போலீசார் மீட்டனர். அவர்கள் மதுரை மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement