நாமக்கல் மாவட்டத்தில் 711 மி.மீ., மழை பதிவு
நாமக்கல்:நாமக்கல்
மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கன
மழை பெய்தது. நேற்று காலை, 6:00 மணி வரை மாவட்டம் முழுவதும், 711 மி.மீ.,
மழை பெய்தது.
மாவட்டத்தில் உள்ள மழை பதிவு மையங்களில் பதிவான விபரம்:
மங்களபுரம்
பகுதியில் அதிகபட்சமாக, 126, கலெக்டர் அலுவலக பெருந்திட்ட
வளாகத்தில், 83, கொல்லிமலை செம்மேடு, 81, சேந்தமங்கலம், 75,
புதுச்சத்திரம், 71, திருச்செங்கோடு, 66.80, நாமக்கல் நகர், 60,
எருமப்பட்டி, 45, ராசிபுரம், 43, பரமத்தி வேலுார், 30,
குமாரபாளையம், 17.20, மோகனுார், 13 மி.மீ., மழை பதிவானது. மாவட்டம்
முழுவதும் பெய்த தொடர் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர்
தேங்கியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement