தமிழக பல்கலைகளில் விரைவில்பொறுப்பு துணைவேந்தர்கள் தேர்வு: அமைச்சர் விஸ்வநாதன் உறுதி

மதுரை: துணைவேந்தர் இல்லாத பல்கலைகளில் விரைவில் பொறுப்பு துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவர், என உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 13 அரசு உட்பட 22 பல்கலைகளில் தற்போது 17ல் துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. 2021 முதல் 2025 வரை முதல்வர் – கவர்னருக்கு இடையே மோதல், குளறுபடியால் துணைவேந்தர்கள் நியமிப்பது இழுத்தடிக்கப்பட்டது.

இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகளால் துணைவேந்தர்களை தேர்வு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பல்கலைகள் பாதிக்கக் கூடாது என கன்வீனர் கமிட்டி, 2 பல்கலைகளில் சீனியர் பேராசிரியர்கள் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைகளில் காலியாக உள்ள சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைகள் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படும். 9 ஆயிரம் பேராசிரியர்கள் பணியிடங்களில், 6 ஆயிரம் பேர் டி.ஆர்.பி., மூலம் 2 ஆண்டுகளில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி 2708 பணியிடங்களை டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றோர் மூலம் நிரப்படவுள்ளனர். பொறுப்பு துணைவேந்தர் பணியிடங்களும் விரைவில் தேர்வு செய்யப்படும். நவ.1ல் டில்லியில் நடக்கும் எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் தமிழக காங்., நிர்வாகிகள் திரளாக பங்கேற்பர். இவ்வாறு கூறினார்.

Advertisement