அ.தி.மு.க., ‘மாஜி’ அமைச்சர் ஆதரவாளர்களை கட்டம் கட்டி வரும் பொதுச்செயலாளர்: மயிலம் தொகுதியில் கட்சியினர் ‘குமுறல்’
அ.தி.மு.க.,பொதுச் செயலாளர் பழனிசாமியின் உத்தரவிற்கு எதிராக, தற்போதைய மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., மாஜி அமைச்சருமான சண்முகம் செயல்பட்டதால், அவர் நீண்ட காலம் வகித்து வந்த விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.
மேலும் அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் சண்முகம், தோல்வி குறித்து ஆராய்வதற்கு கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என சண்முகம் போர்க்கொடி துாக்கினார்.
மேலும், ‘ தமக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது அனைவரும் அறிந்ததுதான். அனைவரையும் அரவணைத்து அ.தி.மு.க.விற்கு புத்துயிர் கொடுக்க பொதுக்குழு கூட்டப்பட்டால், அதற்குத் நான் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், மாவட்டத்தில் ஏற்னவே சண்முகத்தின் நுாற்றுக்கணக்கான ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை பறித்து, புதிய நிர்வாகிகளை நியமித்த பொதுச் செயலாளர் பழனிசாமி, கடந்த 15ம் தேதி மீண்டும் சண்முகத்தின் ஆதரவாளர்கள் குறிப்பாக மயிலம் தொகுதியில் சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள், அணி அமைப்பாளர்கள், ஊராட்சி கிளை செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., வினரின் கட்சி பொறுப்புகளை நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார்.
மயிலம் தொகுதியில் மட்டும் சண்முகத்தின் ஆதரவாளர்கள் வகித்து வந்த கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட சம்பவம், தொகுதியில் உள்ள அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு