ஆமை வேகத்தில் தடுப்பணை கட்டும் பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
காரியாபட்டி: குண்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பணிகள் ஆமை வேதத்தில் நடப்பதால் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. விரைந்து முடிக்க விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காரியாபட்டி வக்கணாங்குண்டு, சித்து மூன்றடைப்பு, அல்லிக்குளம் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு நீர் ஆதாரத்தை ஏற்படுத்த விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மழைநீர் வீணாக கடலில் கலந்தது. இதனை தடுத்து கண்மாய்களுக்கு மழை நீரை கொண்டு செல்ல காரியாபட்டி, பிசிண்டி அருகே குண்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில் ரூ. 25 கோடியில் தடுப்பணை கட்டும் பணி துவங்கப்பட்டது. மழைக்காலத்திற்கு முன் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 9 மாதங்கள் ஆகியும் ஆமை வேகத்தில் பணிகள் நடக்கிறது. சில தினங்களுக்கு முன் மதுரை பகுதியில் நல்ல மழை பெய்து, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . பணிகள் முழுமை அடையாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழி இன்றி வீணாக சென்றது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். தடுப்பணை பணிகள் முடிந்திருந்தால் பல்வேறு கண்மாய்கள் நிறைந்திருக்கும். இனியாவது விரைந்து பணிகளை முடித்து, வரத்துக்கால்வாயில் மழை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
தி.மு.க., நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்கலை பேராசிரியர் குறித்து புகார்
-
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம்
-
நில அளவையரை கண்டித்து மகனுடன் விவசாயி தர்ணா
-
கடம்பூரில் வழிப்பாதையில் மரங்களை வைத்து அடைப்பு
-
மாணவர் இறந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் இடமாற்றம்
-
கல்லுாரி பேராசிரியரை தாக்கிய வழக்கில் மேலும் ஒருவர் கைது