விளைநிலம் காப்போம் விவசாயிகள் கூட்டம்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே தொருவளூர் கிராமத்தில் விளை நிலம் காப்போம் இயக்கம் திட்டம் தொடர்பான விவசாயிகள் கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குநர் அம்பேத்குமார் தலைமை வகித்தார். உதவி இயக்குநர் (தகவல், தரக்கட்டுப்பாடு) நாகராஜன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் பாலாஜி பேசுகையில், மண் வாழ் உயிர்களை காக்க உயிர் உரங்கள், பசுந்தாள், பசுந்தழை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரம் மூலம் மண் வளம் மேம்பட்டு மகசூல் அதிகரிக்கும் என்றார். தொருவளூர் கால்நடை உதவி டாக்டர் கார்த்திகேயன், வேளாண்மை அலுவலர் தமிழ் பங்கேற்றனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கோசலாதேவி, உதவி மேலாளர் ராஜேஸ்குமார் ஏற்பாடுகளை செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement