அரசு பள்ளியில் மழைநீர் தேக்கம்: மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி
திட்டக்குடி: திட்டக்குடி அருகே பள்ளி வளாகத்தில் வடிகால் வசதியின்றி மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைகின்றனர்.
திட்டக்குடி அடுத்த கோடங்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 40 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் வடிகால் வசதி இல்லாததால், தற்போது பெய்து வரும் மழை நீர் வெளியேற வசதியின்றி, குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைகின்றனர்.
எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அர்னாப் புயல் எதிரொலி; ஆந்திரா, ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கொட்டியது கனமழை
-
இஸ்ரேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு; அதிபர் நெதன்யாகுவுக்கு பின்னடைவு
-
12,000 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்! தொடர் கண்காணிப்பில் மாவட்ட அதிகாரிகள்
-
மேற்கு ஆசிய பதற்றம்; நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்: பிரிக்ஸ் பார்லிமென்ட் மன்றம் வலியுறுத்தல்
-
5 தொகுதி இடைத்தேர்தல்: ஸ்டாலின் வியூகத்தை முறியடிக்க த.வெ.க., அதிரடி திட்டம்
-
வாகனத்தில் 225 கிலோ குட்கா கடத்திய இருவருக்கு 'காப்பு'
Advertisement
Advertisement