முதல்வரை விமர்சித்த புகார்: தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
விழுப்புரம்: முதல்வரை விமர்சித்த புகாரில், தேடப்பட்ட வேலுார் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் டீட்டா சரவணன், விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, கட்சி நிதி பெயரில் 100 கோடி ரூபாய் அளவில் லஞ்சம் பெற்றதாக தி.மு.க., முன்னாள் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் மீது வழக்கு பதிந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நேற்று (அக்.,27) அவரை கைது செய்தனர்.
அவரை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றபோது, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க., வினர் கைது நடவடிக்கையைக் கண்டித்து போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலுார் மாநகராட்சியின் 12வது வார்டு கவுன்சிலர் டீட்டா சரவணன், 49; 'அன்னைக்கே கரூர்ல போட்டிருந்தா இந்த நிலை வந்திருக்காது தலைவரே' என முதல்வர் விஜயை விமர்சித்து கோஷம் எழுப்பினார்.
இது தொடர்பாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டீட்டா சரவணன் மீது வழக்குப் பதிந்து செய்து, அவரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், விழுப்புரம், தெற்கு ஐயனார் குளம் வீதியில் உள்ள தி.மு.க., இளைஞரணி நிர்வாகியான பிரேம் வீட்டில் தலைமறைவாக தங்கியிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இன்று (அக்.,28) காலை 8:15 மணிக்கு, விழுப்புரம் வந்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், விழுப்புரம் டவுன் போலீசார் முன்னிலையில் டீட்டா சரவணனை கைது செய்து, சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அவருடன், அடைக்கலம் கொடுத்த விழுப்புரம் தி.மு.க., நிர்வாகி பிரேமையும் அழைத்துச் சென்றதால் பரபரப்பு நிலவியது.
மேலும்
-
கல்லுாரி மாணவன் தற்கொலை
-
மின்சார கட்டமைப்பை மேம்படுத்த எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனை
-
மக்களை திரட்டி போராட்டம் விக்னேஷ் கண்ணன் எச்சரிக்கை
-
அமைப்பு சாரா தொழிலார்களுக்கு மருத்துவ காப்பீடு: காங்., வைத்திலிங்கம் கோரிக்கை
-
பழநி நில மோசடி வழக்கு ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
-
கூடுதல் விலைக்கு உரம் விற்பனைபரமக்குடியில் 6 கடைக்கு நோட்டீஸ்