பைக்கில் சென்ற சமையலர் சென்டர் மீடியனில் மோதி பலி
பரங்கிப்பேட்டை: பைக்கில் சென்ற சமையலர், சென்டர் மீடியனில் மோதி இறந்தார்.
புவனகிரி அடுத்த சொக்கன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் வீரமணி,22; சமையலர். இவர் நேற்று (அக்.,25) பைக்கில் புவனகிரி பங்களா அருகே பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சென்டர் மீடியனில் மோதியது.
அதில் படுகாயமடைந்த வீரமணியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று (அக்.,26) இறந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement