விஜய் டெக்ஸ் புதிய கிளை பண்ருட்டியில் திறப்பு
பண்ருட்டி: பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் புதிதாக விஜய் டெக்ஸ் கிளை திறப்பு விழா நடந்தது.
விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு விஜய் டெக்ஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்தக் கடைக்கு கள்ளக்குறிச்சியில் கிளை உள்ளது. இதன் புதிய கிளை தற்போது பண்ருட்டி இந்திரா காந்தி சாலையில் திறக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழாவிற்கு வந்தவர்களை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விருத்தாசலம் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், இணை செயலாளர் செந்தில் இளமாறன் வரவேற்றனர். புதிய ேஷாரூமை விஜய் டெக்ஸ் நிறுவனர் மலர்க்கொடி ஆதிவராகன் திறந்து வைத்தார்.
விழாவில் மோகன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், பனாரஸ் ஸ்வீட்ஸ் கிருஷ்ணமூர்த்தி, விருத்தாசலம் நகர வணிகர் சங்க தலைவர் கோபு ,செயலாளர் மணிவண்ணன், பேரமைப்பு மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், லைன்ஸ் சங்க தலைவர் புஷ்பா், முன்னாள் தலைவர் பாலு , ரோட்டரி சங்க தலைவர் அருள், செயலாளர் அருண், உதவி ஆளுநர் பாரதிதாசன், ரவிசேகர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழா மற்றும் தீபாவளியையொட்டி, யார் அந்த தங்க மகள்? உங்கள் வீட்டின் தங்க மகள் யார்? என்ற பெயரில் ஸ்லோகன் கான்டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி வரும் நவம்பர் 7-ந் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியில், விஜய் டெக்ஸில் ரூ.1500-க்கு மேல் ஆடைகள் வாங்கும் அனைவரும் கலந்து கொள்ளலாம். தீபாவளிக்கு மறுநாள் 9-ந் தேதி குலுக்கல் நடைபெறும்.
இந்த ஸ்லோகன் போட்டியில் வெல்லும் போட்டியாளருக்கு முதல் பரிசாக 5 சவரன் தங்கம் வழங்கப்படும். இதுதவிர 2 முதல் 10 இடங்களை பிடிப்போருக்கு குளிர்சாதன பெட்டி, ஏ.சி., வாஷிங் மெஷின், மிக்ஸி, வெட் கிரைண்டர் பரிசாக வழங்கப்படும்.
மேலும் விஜய் டெக்ஸில் ரூ.500-க்கு மேல் ஆடைகள் வாங்கும் அனைவருக்கும் டிஸ்கவுன்ட் கூப்பன் வழங்கப்படம். இந்த கூப்பனை நவ.9ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'