நில அளவையரை கண்டித்து மகனுடன் விவசாயி தர்ணா
ஆத்துார்: கெங்கவல்லி அருகே, செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் துரையரசன், 52. இவரது மகன் பொன்னர், 26. இவர்கள் கடந்த ஜூலை, 9ல், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில், நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா வழங்க வேண்டும் என, மனு அளித்தனர்.
அந்த மனு மீது விசாரணை செய்து, அளவீடு செய்யும்படி, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், தாலுகா நில அளவையர் விக்னேஷ், நிலத்தை அளவீடு செய்யாமல் அலைகழிப்பு செய்வதாக, துரையரசன், அவரது மகன் பொன்னர் ஆகியோர் நேற்று காலை, 11:00 மணியளவில், கெங்கவல்லி தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து, பதாகையை கையில் ஏந்தியபடி
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 'நிலத்தை அளவீடு செய்வதற்கு, தாசில்தாரிடம் பேசியுள்ளோம். அவர், நிலத்தை அளவீடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்' என, போலீசார் கூறினர். அதன்பின் இருவரும் கலைந்து சென்றனர்.
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்