அறிவியல் நிலையம் சார்பில்விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி நடந்தது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த திருமூலஸ்தானம் கிராமத்தில் நடந்த பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்து, மண்வளம் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
பேராசிரியர்கள் சத்யநாராயணன், சுஜெய்வேலு, கமலக்கண்ணன் நிலங்களின் சத்துக்களுக்கு தகுந்தாற்போல உர பரிந்துரை, யூரியா மற்றும் டி.ஏ.பி., அதிகமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர்.
மேலும், உயிர் உரங்கள், பசுந்தாள் மற்றும் தொழு உரங்களின் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் மண்ணில் பேரூட்டம், நுண்ணுாட்டச் சத்துக்கள் மேம்பாடு, மண்வள அட்டையில் பரிந்துரைத்த அளவில் உர பரிந்துரைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, கம்மாபுரம் வட்டாரங்களில் நடந்த பயிற்சியில், நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகளுக்கு நுண்ணுாட்ட சத்துக்கள் அடங்கிய உரங்கள் வழங்கப்பட்டன.
மேலும்
-
நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
-
ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்பு
-
ஜவுளி கடையில் பணம் திருட்டு: பெங்களூரு விரைந்த போலீசார்
-
இந்திய மேலாண்மை மாணவர் மாநாட்டில் சோனா எம்.பி.ஏ., மாணவர்கள் சாதனை
-
விவசாய தொழிலாளர் சங்க மாநில மாநாடு, ஊர்வலம்
-
பத்திர பதிவுத்துறை 'ஸ்டார் 3.0' திட்டத்துக்கு எதிர்ப்பு தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தினர் 'ஸ்டிரைக்'