அரிவாள் வெட்டு 5 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் கெங்குவார்பட்டி பஜனை மடத்தெரு சுதாகரன் 36. இவர் காட்ரோடு புஷ்பராணி நகரில் ஓட்டல் நடத்த ஏற்பாடு செய்து வந்தார். ஏற்கனவே ஓட்டல் தொழில் நடத்துவது தொடர்பாக இவருக்கும் டி. காமக்காபட்டி சந்துரு 26 என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் கெங்குவார்பட்டி பகுதியில் நின்றிருந்த சுதாகரனை, சந்துரு, அவரது தம்பி சந்தோஷ், உறவினர்கள் புவனேஸ்வரன், கவுதம், சிவா ஆகியோர் அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த சுதாகரன் உறவினர் பிரபாகரனையும் தாக்கினர். காயமடைந்த சுதாகரன் மதுரையினர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தேவதானப்பட்டி போலீசார் சந்துரு, சந்தோஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு
Advertisement
Advertisement