அரசாணைகள், நியமனங்கள் மூடி மறைப்பு கேள்விக்குறியாகும் அரசின் வெளிப்படை தன்மை
சென்னை: தமிழக அரசு துறைகள் சார்பாக பிறப்பிக்கப்படும் அரசாணைகளை, முறையாக வெளியிடாமல் மறைப்பதால், வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘த.வெ.க., ஆட்சி வெளிப் படைத் தன்மையுடன் நடக்கும்’ என, முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அரசு நியமனங்கள், அரசாணைகள் உள்ளிட்ட எதிலும் வெளிப்படை தன்மையே இல்லை என்று கூறப்படுகிறது.
இ
இதுகுறித்து, தலைமை செயலக வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக அரசில் மொத்தம் 42 துறைகளும், நுாற்றுக் கும் அதிகமான இயக்குனரகங்களும் ஆணையரகங்களும் உள்ளன. அரசின் நிர்வாக பணிகள், திட்டங்கள், அறிவிப்புகள் தொடர்பான அரசாணைகளை, துறையின் செயலர்களான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வெளியிடுவர்.
அந்த வகையில், ஒரு நாளைக்கு சராசரியாக, 20 முதல், 30 அரசாணைகள் வெளியாகும். இவற்றை பொதுமக்கள், ஊடகங்கள், அரசு அலுவலர்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல, செய்தித்துறை வாயிலாக. அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
ஆனால், கடந்த ஆட்சி களை போலவே, த.வெ.க., அரசும் அரசாணைகளை திட்டமிட்டு மறைக்கிறது. எதை வெளியிட்டால் அரசுக்கு சிக்கல் வராதோ, விளம்பரம் வருமோ, அவை மட்டுமே செய்தித்துறை வாயிலாக வெளியாகின்றன.
குறிப்பாக, சென்னை பட்டினப்பாக்கத்தில், புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான அரசாணையை, பொதுத்துறை இன்று வரை வெளியிடவில்லை. அதேபோல, நிறுத்தப்பட்ட, ‘லிமிடெட் டெண்டர்’ முறையை, மீண்டும் தொடங்குவதற்கான அரசாணையை, நெடுஞ்சாலை துறை வெளியிடவில்லை .
அரசாணைகள் மறைக்கப்படுவது ஒருவகை என்றால், பல நாட்களுக்கு பின் வெளியிடுவது வேறு வகை.
உதாரணமாக, மழைநீர் சேமிப்பு தொடர்பாக, கடந்த, 16ம் தேதி, ஒரு அரசாணையை, நகராட்சி நிர்வாகத்துறை தயார் செய்தது. ஆனால், அந்த அரசாணை, 19ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல்வர் கவனிக்கும் துறையின் நிலைமையே இப்படித்தான் உள்ளது.
அரசாணை விவகாரத்தில் இப்படியென்றால், அரசின் நியமன பதவிகளிலும் வெளிப்படை தன்மை இல்லை. முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரிக்கி ரத்தன் பண்டித் வெற்றிவேலின் நியமனம், செய்தித்துறை மூலம் வெளியிடப்படாமல், கடந்த, மே 12ம் தேதி கசிய விடப்பட்டது.
எதிர்ப்பு கிளம்பியதால், அது ரத்து செய்யப்படுவதாக செய்தித்துறை அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அதே நாளில் முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்ட ஜெகதீஷின் நியமனம் குறித்த அறிவிப்பு, இன்று வரை வெளியிடப்படவில்லை.
இ
அத்துடன், முதல்வரின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டதற்கான ஆணைகளும் இன்று வரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
முக்கியமான விவகாரங்களில், ஒரு செய்தியை கசிய விட்டு, முதலில் ஆழம் பார்க்கின்றனர். அதற்கு எதிர்ப்பு வரவில்லை என்றால் மட்டுமே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது.
எதிர்ப்பு கிளம்பினால், அரசாணை, நியமனங்களை மறைத்து விடுகின்றனர். இதை ஒரு வியூகமாகவே, த.வெ.க., அரசு தொடர்ந்து செய்கிறது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
மேலும்
-
சிலிண்டர்கள் வெடித்த விபத்து புதுமண தம்பதி மூச்சு திணறி பலி
-
கோவிலுக்கு வந்து சேர்ந்த ஹாசனாம்பாவின் நகைகள்
-
அமைச்சர் மகன் பற்றி சர்ச்சை நடிகர் தன்வீர் கவுடா மீது புகார்
-
வெவ்வேறு விபத்துகளில் தம்பதி உட்பட 6 பேர் பலி
-
கரும்பு விவசாயிகளை அரவணைத்து செல்லுங்கள் ஆலை உரிமையாளர்களுக்கு சிவகுமார் அறிவுரை
-
நெற்பயிருக்கு மருந்து தௌித்தல்