தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: தவெக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது; மிக மோசமான நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டுகிறது; ஆனால் இடைத்தேர்தலை நோக்கி முதல்வர் விஜய் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார்.
விலைவாசி உயர்வை கட்டுபடுத்த முடியாமல் காலத்தை வீண் அடிக்கின்றனர்; விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். எங்கெல்லாம் இடைத்தேர்தல் வருகிறதோ அங்கெல்லாம் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். தேர்தலை நோக்கி தான் முதல்வர் விஜய் பிரசாரம் செய்து வருகிறார். திறமையற்ற அரசு நடந்து வருவதால் தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் குறைந்துவிட்டது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (2)
Sundara Varadhan - ,இந்தியா
03 நவ,2026 - 15:29 Report Abuse
இதற்கு முழுக்க முழுக்க காரணம் நீங்கள் தான். உங்களது ஆட்சிக்காலத்தில் 2017 முதல் 2021 வரை, ஊழல் செய்யாமல் இருந்திருந்தால், உங்களது ஆட்சியே கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்திருக்குமே. நீங்களும் ஊழல் செய்து, மாற்றவர்களையும் ஊழல் செய்ய விட்டதால் தான், 2021ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03 நவ,2026 - 14:29 Report Abuse
விண்ணை எப்படி முட்டியது? ஒருவேளை ISRO விட்ட ராக்கெட்டில் ஏறி சென்றதா? 0
0
Reply
மேலும்
-
கோபுரத்தை சுத்தம் செய்யும் பணிக்கு நந்தி வாகனத்தை பயன்படுத்தியதால் சர்ச்சை
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
Advertisement
Advertisement