பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-நமது நிருபர்-
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, வெங்கடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பி.தாமோதரன். இவருக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்க கோரி, விஏஓ சேர்ம பாண்டியனை அணுகினார். பட்டா வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பிறகு ரூ.4,000 லஞ்சம் கொடுக்குமாறு கூறி இருக்கிறார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தாமோதரன் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
இன்று (நவம்பர் 03) தாமோதரன், போலீசார் வழங்கிய ரசாயனப் பொடி தடவிய ரூ.4,000 பணத்தை சேர்ம பாண்டியனிடம் கொடுத்தார்.
அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சேர்ம பாண்டியனை கையும் களவுமாக கைது செய்தனர்.
வாசகர் கருத்து (9)
c.mohanraj raj - ,
04 நவ,2026 - 06:48 Report Abuse
பத்தாண்டுகள் கழித்து மொத்தமாக சம்பளத்தையும் அதற்கான வட்டி தொகையும் கொடுப்பார்கள் பிறகு எதற்கு இந்த வேண்டாத வேலை பிடித்த இடத்திலேயே disness செய்தால் சரியாகிவிடும் அது மட்டுமல்ல சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் அதுமட்டுமல்ல அதற்கெல்லாம் ஆண்மை வேண்டும் ஆள்பவர்களுக்கு 0
0
Reply
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
03 நவ,2026 - 19:39 Report Abuse
இந்த. ஆயிரக்கணக்கான. ரூபாய். லஞ்சத்தைப். பிடிப்பவர்களிடம், அமைச்சர் தனக்கு. 5. கோடி. Offer செய்தவரைப். பிடித்துக்கொடுத்து. சேவை. செய்திருக்கலாமே 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
03 நவ,2026 - 18:22 Report Abuse
உடனடியாக டிஸ்மிஸ் செய்து அரசுப்பணியில் இருக்கும்போது இறந்துபோனவர் வாரிசுக்கு உடனடி நியமனம் தரனும் 0
0
K.n. Dhasarathan - chennai,இந்தியா
03 நவ,2026 - 21:09Report Abuse
சரியாக சொன்னீர்கள், பாஸ்கரன், அந்த வி.எ.ஓ வை இட மாற்றம் செய்வதோ, வேறு துறை மாற்றுவதோ கூடாது. உடனடி டிஸ்மிஸ் தான். . காத்திருப்பில் வைத்திருப்பது போல மிக பெரிய தவறு கிடையாது. ஆதாரம் இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கலாம், சும்மா நீதிமன்றத்தில் போட்டு வருடக்கணக்கில் இழுத்து, கடைசியில் ஆதாரம் போதாது என்று சொல்லி விடுதலை செய்து விடுவார். எல்லோரையும் முட்டாளாக்கி விடுவார். இன்றைக்கு குற்றங்கள் பெருகி இருப்பதற்கு நீதி மன்றமும் ஒரு காரணம். 0
0
Reply
RK - ,
03 நவ,2026 - 15:33 Report Abuse
நிரந்தர வேலை இழப்பு மட்டுமே லஞ்சம் என்னும் நோயை குணமாக்கும் தடுப்பு ஊசி !!! 0
0
jss - ,
03 நவ,2026 - 21:14Report Abuse
அப்போது லஞ்சம் வாங்கிய மந்திரிகளுக்கு தண்டனை ஏதும் கிடையாது. லஞ்ஞ குற்ற செய்த அரசியல்வாதியும், அவர்தம் குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் வாழ்நாள. முழுதும் தேர்தலில் நிற்க்க்கூடாது. அவர்களின் சொத்து பறிமுதல் செய்யப்பட வேண்டும் 0
0
Reply
GMM - KA,இந்தியா
03 நவ,2026 - 15:30 Report Abuse
பட்டா வழங்க உள்ளாட்சி அமைப்புகள் சர்வே பிரிவு பரிந்துரை அடிப்படையில் தாசில்தார் அலுவலகம் பட்டா வழங்குவதாக செய்தி.. உள்ளாட்சி ஊழியர் இடத்தை நேரில் பார்த்து யார் உரிமையாளர் என்று பார்க்காமல் யார் ஆக்கிரமித்து குடியிருக்கிறார் என்று பார்த்து, விசாரித்து சில லட்சம் சொத்தில் சில ஆயிரம் பெற்று வில்லங்கம் செய்து வருகிறார்கள். நிறைய கிராம நிர்வாக அதிகாரிகள் பிடி படுவதாக செய்தி. உள்ளாட்சி அலுவலர் செய்தி வருவதில்லை. எது உண்மை. 0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
03 நவ,2026 - 14:59 Report Abuse
விஜய் அரசு லஞ்ச வாங்குவது குற்றம் என்பதை பலமுறை அறிவித்த பின்னும் சொரணையிலாமல் லஞ்சம் கேட்கும் பேர்வழிகளின் வாய் மேலேயே நாலு குத்து குத்த வேண்டும். தண்டனை free offence என்று அறிவிக்கலாம். 0
0
Ramesh R - Chennai,இந்தியா
03 நவ,2026 - 23:27Report Abuse
இது போன்ற Micro bribes செய்திகள் திமுக ஆட்சியிலேயே அடிக்கடி வரும். 0
0
Reply
மேலும்
-
பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
-
ராஜஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பு; ரயில்கள் ரத்து
-
எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
-
டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்
-
பனை விதைகள் நடவு
-
பஸ் ஸ்டாண்டில் சடலம் கொலை செய்து வீச்சா?
Advertisement
Advertisement