'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-நமது சிறப்பு நிருபர்-
'ஒர்க் பிரம் ஹோம்' என்பதை 'ஒர்க் பிரம் பார்க்' ஆக மாற்றியுள்ளது துபாய் அரசு. இனி, பசுமை சூழ்ந்த பூங்காவில் குளத்தைப் பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ள மேஜை, நாற்காலியை பயன்படுத்தி பணியாற்றலாம். அல் பர்ஷா குளப் பூங்காவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
துபாயின் மற்ற பொதுப் பூங்காக்களுக்கும் இந்த 'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் விரிவாக்கப்படும் எனத் துபாய் மாநகராட்சி தெரிவித்துள்ளது. நிரந்தர அலுவலகம் தேவைப்படுவோர் ஒரு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை தனியறை மற்றும் டெஸ்குகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். பெற்றோர் தங்களது குழந்தைகளை பூங்காவில் விளையாட விட்டுவிட்டு தங்களது வேலையை கவனிக்கலாம்
இத்துடன் துபாயின் கடும் வெப்பத்தை சமாளிக்க குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் அனைத்து வானிலைக்கும் ஏற்றவாறு அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
விலை எவ்வளவு?
* காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது. இந்த ஒர்க் பிரம் ஹோம் பூங்காவில் 30 பேர் வரை அமர்ந்து பணியாற்ற முடியும். இது முற்றிலும் இலவசம்.
* பிரத்யேக அறை வேண்டுமெனில், ஒரு நாள் கட்டணம் 50 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.1,292) செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் இலவசமாக காபி, வைபை மற்றும் சார்ஜிங் வசதிகளும் கிடைக்கும்.
* தலா 9 பேர் அமரக்கூடிய இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 200 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ.5,168) முதல் வாடகைக்கு கிடைக்கின்றன.
* லெட்ஸ்வொர்க் இணையதளம், அதன் செயலி அல்லது 04 581 3652 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் முன்பதிவுகளைச் செய்யலாம்.
பொது பூங்காக்களை பல்நோக்கு சமூக இடங்களாக மாற்றுவதற்கான துபாய் மாநகராட்சியின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
துபாய் முழுவதும் மற்ற பூங்காக்களிலும் இதேபோன்ற வசதிகளை அறிமுகப்படுத்துவதா, இல்லையா என்று முடிவெடுப்பதற்கு முன், அதிகாரிகள் கருத்துக்களை கேட்டு வருகின்றனர்.
பாலைவன சூட்டில் காய்ந்து கருவாடாகவா?
அட, அந்த மன்னார் அண்டு கம்பெனி காலத்தில் இருந்து நாங்க அதைத் தானே செய்து கொண்டு இருக்கிறோம்! காபி டிபன் மனைவி கட்டி கொடுத்து விடுவார்கள்! ! சாப்பிட்டு விட்டு பார்க் பெஞ்சில் சுகமாக ஒரு தூக்கம்! மாலை டிபன் பிறகு வீடு! அங்கே பைரவன் சேவை நாட்டுக்கு தேவை என்று முழக்கம்!
Work from Park Then where to Love? Love at Home?மேலும்
-
முற்றுகைப் போராட்டம்
-
தேனியில் குவியும் பொதுமக்கள் களைகட்டிய தீபாவளி விற்பனை
-
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் 1,008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
-
170 ஆண்டு நீராவி ரயில் இன்ஜின் எழும்பூர் – ராயபுரம் வரை இயக்கம்: ரயில்வே பாரம்பரிய விழா
-
சைவம், வைணவம் பற்றி பேசிய தி.மு.க., ‘மாஜி’ மீதான வழக்கை வாபஸ் பெற்றார் பா.ஜ., கவுன்சிலர்
-
மகாதேவ் சூதாட்ட செயலி; மற்றொரு முக்கிய குற்றவாளி ரவி உப்பால் துபாயில் கைது