சபரிமலை ஆன்லைன் புக்கிங் வரும் 29ல் தொடக்கம்
சபரிமலை: கேரளாவின் சபரிமலைஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கான, 'ஆன்லைன்' முன்பதிவு வரும் 29-ல் தொடங்குகிறது.
சபரிமலையில் கூட்டத்தை ஒழுங்கபடுத்த, 'ஆன்லைன்' முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலம் நவ., 16-ல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு வரும் 29 காலை 10:00 மணிக்கு தொடங்கும் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
பக்தர்கள், www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். நிலக்கல்- பம்பை பாதை வழியாக தினமும் 60 ஆயிரம் பேருக்கும், எருமேலி, பெருவழிப் பாதை மற்றும் வண்டிப்பெரியாறு, சத்திரம் பாதையில் தலா 3,000 பேருக்கும் தினமும் அனுமதி வழங்கப்படும். நிலக்கல், எருமேலி வண்டிப்பெரியாறு ஆகிய இடங்களில், 'ஸ்பாட் புக்கிங்' வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆன்லைன்ல தரிசனம் புக்கிங் வந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது. ஆனால் சைடு வருமானம் போய்டும். கல்லா கட்டமுடியாது.
அனைத்து முகூர்த்த நாட்களிலும், திருவிழாக்காலங்களிலும் மற்றும் இந்துக்களின் விசேஷ தினங்களிலும் தமிழகத்தில் உள்ள பெரிய கோவில்களான ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருச்செந்தூர் முருகன், , மதுரை மீனாட்சி அம்மன், பழனி முருகன் ஆகிய கோவில்களில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்திலும் ஆன்லைன் முறையில் பதிவு செய்து தரிசனம் செய்யும் முறையை அறிமுகம் செய்யவேண்டும்.
சாமியே சரணம் ஐயப்பாமேலும்
-
முதல்வரை விமர்சித்த புகாரில் தேடப்பட்ட வேலுார் தி.மு.க., கவுன்சிலர் விழுப்புரத்தில் கைது
-
வேளாண் கல்லுாரி மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சரண்டரான நக்சல் முக்கிய தலைவனுக்கு சிறையில் திருமணம்; போலீஸ் உயரதிகாரிகள் வாழ்த்து
-
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
-
15 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனையும் அபாயம்
-
விளையாட்டில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு