பள்ளி மாணவிக்கு பொருளியல் விருது
திருமங்கலம்: திருமங்கலம் அரசு பெண்கள் பள்ளியின் 12ம் வகுப்பு மாணவி ஆசிபா. இவர் எழுதிய பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு -2026 என்ற கட்டுரை மற்றும் அவரின் பொருளியல் சிந்தனைகளை பாராட்டி அவருக்கு இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தன்னார்வக் குழு பொருளியலின் இளவரசி ஆசிபா என்ற விருதை அறிவித்தது.
இதையடுத்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை காமராஜர் பல்கலையின் கணித பொருளாதாரத் துறை தலைவர் புஷ்பராஜ், மதுரை அமெரிக்கன் கல்லுாரி ஓய்வு பொருளாதார துறைத் தலைவர் முத்துராஜா, எழுமலை அரசு ஆண்கள் பள்ளி முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் ஆசிபாவுக்கு விருது வழங்கினர். மாணவி ஆசிபாவை, தலைமையாசிரியர் அருள்ஜோதி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
கூட்டுறவு நிறுவனங்களில் உரங்கள் இருப்பு அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை: கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் தகவல்
-
காய்ந்த மரங்களை அகற்றலாமே பரமக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு ஆபத்து
-
E20 எரிபொருளுக்கு எதிரான பிரசாரம் பணம் கொடுத்து நடத்தப்பட்டவை; அமைச்சர் நிதின் கட்கரி
-
இளைஞர் மீது காரால் மோதி தள்ளி அரிவாளால் வெட்டிய மாஜி காதலி உட்பட மூவர் கைது
-
மருதுபாண்டியர் ஜெயந்தி விழா
Advertisement
Advertisement