E20 எரிபொருளுக்கு எதிரான பிரசாரம் பணம் கொடுத்து நடத்தப்பட்டவை; அமைச்சர் நிதின் கட்கரி
E20 பெட்ரோலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் பணம் கொடுத்து நடத்தப்பட்டவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.
அண்மையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி E20 (20 சதவிதம் எத்தனால்,80 சதவிதம் பெட்ரோல் கலந்த எரிபொருள்) மற்றும் E100 (100 சதவிதம் எத்தனால்) வரையிலான எரிபொருளில் இயங்கும் பிரத்யேக வாகனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஆனால், E20 எரிபொருள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இவற்றில் பெரும்பான்மையான கருத்துகள் புனையப்பட்டவையாகவே இருக்கின்றன. இந்த தகவல்கள் தவறானவையே என்று பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் அறிவித்துள்ளன.
ஐஐடி ஆய்வு முடிவுகள் மற்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகமும், E20 எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. ஆனாலும், E20 எரிபொருள் பற்றி தவறான தகவல்கள் புதிது, புதிதாக வெளியிடப்பட்டு வருகின்றன.
இப்படி வெளியாகும் தகவல்களை வெளியிடுமாறு, பணம் கொடுத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிஐஐ எனப்படும் தொழில்துறை அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசி உள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரி மேலும் பேசியதாவது;
3 மாதங்கள் முன்பு, E20 எரிபொருளுக்கு எதிராக பெரும் கூச்சல்கள், கோபங்கள் எழுந்தன. இப்போது ஓய்ந்துவிட்டன. காரணம், அவை பணம் கொடுக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட பிரசாரம். கடந்த 3 ஆண்டுகளாக இந்த எரிபொருளை பயன்படுத்தியதால் வாகனங்கள் பழுதானதாக எந்த சான்றுகளும் இல்லை.
20 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகனங்களும், 3 கோடிக்கும் அதிகமான கார்களும் இந்த எரிபொருளைக் கொண்டே இயங்கி வருகின்றன. சில நெடுஞ்சாலைகள் மோசமாக இருப்பதாக புகார்கள் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு எவ்வித சிரமமும் இருக்காது.
மத்திய அரசின் சாலை திட்டங்கள், புனித தலங்களுக்கான பயண நேரத்தை குறைத்து, சுற்றுலாவாசிகளின் வருகையை அதிகரித்து, வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தந்துள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது, பொருளாதாரத்தின் முதுகெலும்பு.
இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
Ganne ka joos. Bada gilaas.
முதல் பதிவு எவன் போட்டானோ அப்பொழுதே அவனைத் தூக்கி மிதித்து இருந்தால் இந்த மாதிரி நடவடிக்கை தேவையில்லாமல் இருந்திருக்கும் பத்து ரூபாய் காசு செல்லாது என்று பரப்பினார்களே அதற்குப் இப்படித்தான் விட்டு விட்டு வேடிக்கை பார்த்தீர்கள்
E20 பயன்படுத்துமளவுக்கு மாற்றங்கள் செய்யவில்லை என்றால் ஏராளமான கார்கள் காயலான் கடைக்கு போகும் என்பது ரகசியம்.
இந்த எரிச்சல் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும்.மோடி அரசு என்னிக்கு தான் உண்மை பேசியிருக்கு. மோடி அரசு என்னிக்குத் தான் மக்களின் பிரச்சினையை புரிஞ்சிக்கிட்டுருக்கு? My way or highway என்ற திமிரான போக்கு தானே இருந்துள்ளது. பணம் செல்லாதுன்னு ஆரம்பித்து இன்று வரை அராஜகப் போக்கு தொடர்கிறது.
e20 விலை போகாத விரக்தி
ரூபாய் இருநூறுக்கு விலை போன பாபு பேசலாமா
கார்போரேட்டுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு அரசை விட்டதுதான் E20 என்ற கதை, கட்டுக்கதைகள் . அரசே அரங்கேற்றும் கட்டுக்கதைகள்.
வெறும் ரூபாய் இருநூறுக்கு ஒரு கூத்தாடி..மேலும்
-
பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூட்டு செயல்பாடு அவசியம்; ராஜ்நாத்சிங்
-
கள்ளச்சாராயம் தயாரிக்க கற்றுத்தந்த ஏ.ஐ.,
-
முதல்வர் விஜய் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
-
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம்; குஜராத் அணியில் தமிழக வீராங்கனை கமாலினி... அணிகளின் முழு விபரம்
-
திமுக முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் ரெய்டு
-
ஆசம் கான் பல்கலையின் ரூ.1,170 கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை