வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
அன்னூர்: குன்னியூர், கைகாட்டி, வீரமாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 1ம் தேதி நடைபெறுகிறது.
குன்னியூர், கைகாட்டியில் உள்ள வீரமாத்தியம்மன் கோவிலில் புதிதாக கோபுரம் மற்றும் மேடை அமைத்து புதிய திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்து கோவில் கட்டப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழா வரும் 31ம் தேதி, காலை 8:00 மணிக்கு, மகா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகை கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.
இதையடுத்து, முதற்கால வேள்வி பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. வருகிற நவ. 1ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 8:30 மணிக்கு, விமான கோபுரம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து, தச தானம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும்
-
சட்டசபை விதிமுறைகளை உருவாக்கும் பரிந்துரை டில்லியில் இரண்டாவது கட்ட ஆலோசனை கூட்டம்
-
களைசெடிகள் வளர்ந்துள்ள பூங்கா மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்
-
20 ஆண்டுகளாக நீர்வழிப்பாதையில் அடைப்பு சீராக்க ‘மெட்ரோ’ உதவியை நாடும் மாநகராட்சி
-
மழைநீர் வடிகாலை துார்வாரி சீரமைக்க மக்கள் கோரிக்கை
-
எப்.ஐ.ஆர்., நிலையை அறிய கேரளாவில் புதிய திட்டம்
-
இல்லாத மின்சாரத்தை மக்களுக்கு எப்படி இலவசமாக கொடுப்பீர்கள்; சீமான் கேள்வி