முதல்வர் வருகை குறித்து முன்னேற்பாடு கூட்டம்

ஈரோடு: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வரும் நவ.,3ல் நடக்க உள்ள அரசு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்காக அங்கு ஹெலிபேடு அமைக்கும் பணி, மேடை, பயனாளிகள் பகுதி, வாகனங்கள் நிறுத்துமிடம், வாகனங்கள் வந்து செல்லும் பாதை, அடிப்படை வசதி செய்யும் பணி நடக்கிறது.

இந்த முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம், கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது. எஸ்.பி., கிரண் ஸ்ருதி, மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், டி.ஆர்.ஓ., சாந்திகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடு, தடையற்ற மின்சாரம், அடிப்படை வசதிகளை அந்தந்த துறையினர் முறையாக செய்து முடிக்க யோசனை தெரிவிக்கப்பட்டது.

Advertisement