சிறப்பு பக்கத்திற்கு........................ பதவி உயர்வு கிடைக்கலையே ஆயுதப்படை போலீசார் புலம்பல்

தமிழக போலீஸ் துறையில் கடந்த 2002 ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த பலர், பதவி உயர்வு விரைவாக கிடைக்கும் என்பதற்காக பலர், கடலுார் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019ல் உதவி ஆய்வாளருக்கான தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு காத்திருந்தனர். ஆனால் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பதவி உயர்வு வழங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் 9 ஆண்டுகள் கழிந்தோடிவிட்டன.தற்போது கோர்ட் நிலுவையில் இருந்த வழக்கில், கோர்ட் பதவி உயர்வு வழங்க தீர்ப்பு வழங்கி 4 மாதங்களாகிவிட்டது.

ஆனாலும், போலீஸ் துறையில் பணியாற்றும் தலைமை அலுவலக ஊழியர்கள் இந்த பதவி உயர்வு வழங்குவதை நடைமுறைக்கு கொண்டு வராமல் தாமதப்படுத்தி வருகின்றனர்.

இந்நியைலில், 2002ம் ஆண்டு பேட்ச் தலைமை காவலர்கள் சிலர் பணி ஓய்வு பெற்று விட்டனர். அப்போதும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. போலீசார் தவறு செய்துவிட்டால் ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், பதவி உயர்வை மட்டும் துட்சமாக கருதுவதேன் என ஆயுதப்படைபோலீசார் புலம்பிக் கொண்டுள்ளனர்.

Advertisement