அனைத்துத்துறை அலுவலர்களுக்குநவ.11,12ல் ஆட்சிமொழி பயிலரங்கம்

ராமநாதபுரம்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நவ.,11, 12ல் காலை 10:30 முதல் மாலை 5:45 மணி வரை பழைய கலெக்டர் அலுவலகம் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடக்கிறது.

ஆட்சி மொழியான தமிழ் வரலாறு, சட்டம், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், ஆட்சிமொழி ஆய்வும், குறை களைவு நடவடிக்கைகளும், மொழிப்பயிற்சி, கணினித் தமிழ் முதலிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலர் நிலையில் அலுவலர் (அ) கண்காணிப்பாளர் ஒருவரும், பணியாளர் நிலையில் உதவியாளர் (அ) இளநிலை உதவியாளர் (அ) தட்டச்சர் ஒருவர் என இருவர் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.––

Advertisement