அமெரிக்காவில் பாராட்டு விழா

ராமேஸ்வரம்:

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் பணியை பாராட்டி விழா நடத்தினர்.

பிரதமர் மோடி 25 ஆண்டு கால மக்கள் பணியை பாராட்டும் விதமாக நாடு முழுவதும் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடியின் மக்கள் பணியை பாராட்டி விழா நடத்தினர்.

இதில் பிரதமர் மோடியின் பணிகள் குறித்து வாழ்த்தி பேசி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement