அவமதிப்பு திருப்புத்துார் பயணிகளை மதுரையில் பஸ்களில் ஏற்ற மறுப்பதால் சச்சரவு
திருப்புத்தூர்:
பண்டிகை, விடுமுறை காலங்களில் மதுரை பஸ் ஸ்டாண்டில் திருப்புத்துார் பயணிகளை அனைத்து பஸ்களும் ஏற்ற மறுத்து அவமதித்து வருகின்றனர். இதனால் பயணிகளுக்கும் கண்டக்டர், டிரைவர்களுக்கும் இடையே சச்சரவு ஏற்படுவதை தவிர்க்க, மதுரையில் இருந்து திருப்புத்துாருக்கு நேரடி பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
* மதுரையில் பயணிகள் அவமதிப்பு:
மதுரையில் இருந்து தஞ்சாவூர், காரைக்குடி, தேவகோட்டைக்கு ஏராளமான பஸ்கள் திருப்புத்துார் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கல்வி, வேலைவாய்ப்பிற்காக நுாற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். குறிப்பாக பண்டிகை, விடுமுறை நாட்களில் மதுரைக்கு ஜவுளி எடுக்கவோ, வர்த்தகம் சார்ந்து செல்லும் பயணிகளுக்கு பஸ்களில் போதிய இடமின்றி 1:30 மணி நேரம் நின்றபடியே மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மதுரை எம்.ஜி.ஆர்., பஸ் நிலையத்தில் இருந்து திருப்புத்துார் வழியாக தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் வெளியூர்களுக்கு செல்கின்றன. இந்த பஸ்களில் திருப்புத்துார் செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் அதிக தொலைவில் உள்ள நகரங்களுக்கு செல்லும் பயணிகளை அமர வைத்து, சீட் நிரம்பிய பின்னரே திருப்புத்துார் பயணிகளை ஏற்றுகின்றனர். பஸ்சில் பயணிகளை ஏற்ற மறுக்கும் கண்டக்டர், டிரைவர்களிடம் சண்டையிட்டு, மாற்று பஸ்சிற்கு சென்றால், அதிலும் ஏற விடமாட்டோம். எங்கள் பஸ் சென்றபின்னர் தான், அடுத்த பஸ்சில் ஏற அனுமதிப்போம் என தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக மதுரை பஸ் ஸ்டாண்டில் கண்டக்டர், டிரைவர்களுக்கும் திருப்புத்துார் செல்லும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம், சண்டை ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது.
* பஸ் சிறை பிடிப்பு போராட்டம்:
இதன் காரணமாகவே அதிருப்திக்கு உள்ளாகும் பயணிகள் திருப்புத்துார் வரும் பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண எந்த அதிகாரிகளும் அக்கறை எடுப்பதே இல்லை. இது போன்று அத்துமீறி நடக்கும் கண்டக்டர், டிரைவர்களின் லைசென்ஸ்யை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை மட்டுமின்றி காரைக்குடி பஸ் ஸ்டாண்டிலும் திருப்புத்துாருக்கு செல்லும் பயணிகளை அவமதிப்பது தொடர்கதையாகி வருகிறது.
* பிரச்னைக்கு நிரந்தர தீர்வு:
இது போன்று பல ஆண்டுகளாக நடந்து வரும் பிரச்னைக்கு ஒரே தீர்வு காணும் விதமாக, திருப்புத்துாரில் இருந்து மதுரை மற்றும் காரைக்குடிக்கு ஒன் டூ ஒன் பஸ்களை இயக்க வேண்டும். பரிட்சார்த்தமாக ஒன் டூ ஒன் பஸ்களை இயக்க துவங்கி, பொங்கல் வரை செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் திருப்புத்துார் பயணிகளை மதுரை, காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் கண்டக்டர், டிரைவர்கள் அவமதிப்பது தடுக்கப்படும். போக்குவரத்து கழக அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
மேலும்
-
மருத்துவ மாணவர்களுக்கு கிராமங்களில் கட்டாய சேவை: மத்திய அரசுக்கு கோர்ட் அட்வைஸ்
-
மகேஷை அடுத்து சிக்கப்போவது யார்?: திமுக மாஜிக்கள் கலக்கம்
-
புழல் சிறையில் மகேஷை சந்தித்தார் உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் கோபம்
-
கரையை கடக்கத் துவங்கியது அர்னாப் புயல்! அதிகாலை 4 மணி வரை நீடிக்கும்
-
ஏனாம் நிவாரண முகாமில் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு
-
கஞ்சா விற்ற மாணவர் உட்பட 3 பேர் கைது