சிவ, விஷ்ணு கோவிலில் சத்ய நாராயண பூஜை
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி சிவ, விஷ்ணு கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சத்ய நாராயண பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று (அக்.,26) காலை, 7:00 மணிக்கு மூலவர் விஷ்ணு சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மாலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உற்சவர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதையடுத்து, சத்யநாராயண பூஜை நடந்தது.
பூஜையின்போது சத்ய நாராயண கதைகள் படிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement