தங்கை மீது தாக்குதல்: அண்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த அங்குனி குப்பம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி வீரம்மாள், 44; இவர் அதே ஊரில் உள்ள தனது அண்ணன் சிவகுமாரிடம், 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றரை சவரன் நகையை கடனாக கொடுத்தார்.

கடந்த, 21 ம் தேதி அண்ணன் வீட்டிற்கு சென்று நகையை திருப்பி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சிவக்குமார்,56; அவரது மகன் பிரபாகரன் 26; மனைவி காந்தாமணி,46; உறவினர் வெற்றி,32; ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் வீரம்மாள் மூக்கு உடைந்து சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய இரு சக்கரவாகமும் அடித்து உடைக்கப்பட்டது.

இதுகுறித்து வீரம்மாள் புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார், 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் .

Advertisement