தொழிலாளி கொலையில் டிரைவருக்கு ஆயுள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் கூலி தொழிலாளி கொலை வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
நிலக்கோட்டை அருகே முத்தலாபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 27, கூலி தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்தது.
2020ல் ரோட்டில் நடந்து சென்றுக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்ப உறுப்பினரை மதுபோதையில் அழகர்சாமி, அவரது தம்பி சங்கிலி 40, இருவரும் தகாத வார்த்தையால் திட்டினர். இதை கேள்விபட்ட கிருஷ்ணமூர்த்தி, அவரின் சகோதர, சகோதரியுடன் அழகர்சாமியின் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார்.
அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த டிரைவர் சங்கிலி வீட்டில் இருந்த கத்தியால் கிருஷ்ணமூர்த்தியை குத்திக்கொலை செய்தார். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி சங்கிலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவச்சந்திரன் ஆஜரானார். இவ்வழக்கில் குற்றவாளி சங்கிலிக்கு ஆயுள் தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார்.
மேலும்
-
பாகிஸ்தானில் ஹிந்துக்கள் எண்ணிக்கை 14.60ல் இருந்து 2 சதவீதமாக குறைந்தது
-
ஸ்ரீரங்கம் கோவில் ஜீயரை அறநிலையத்துறை நியமிப்பதை உறுதியாக அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் கண்டிப்பு
-
100% எத்தனால் வாகனங்களுக்கு அனுமதி அளித்தால் வினியோகம் எவ்வாறு மேற்கொள்ளப்படும்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
-
ஏஐ சிப் குறித்த தகவல்: என்விடியா சிஇஓவை உளவுபார்த்த சீனா
-
இஸ்ரேலில் ஆட்சியை தக்கவைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
-
'அர்னாப்' புயலால் ஒடிஷாவில் கனமழை: தனித் தீவுகளாக மாறியது 300 கிராமங்கள்