கோவில்களில் திருட்டு; 3 வாலிபர்கள் கைது
அவிநாசி: அவிநாசி, தெக்கலூர் கோவில்களில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடித்த மூன்று இளைஞர்களைக் கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, வேலுார் பிரிவில் உள்ள பகவதி அம்மன் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த சஞ்சய், 25, ஆர்யா, 21, நித்தீஷ், 23, என்பதும், கோவிலில் திருட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், கடந்த ஆக. 8ம் தேதி அவிநாசி நேரு வீதியில் உள்ள ராக்காத்தம்மன் கோவிலில், தாலிகள், வெள்ளிச் சங்கிலி, வெள்ளி பூசப்பட்ட பிரபாவளங்கள் ஆகியவற்றையும், செப். 7ம் தேதி தெக்கலுார் திம்மநாயக்கன்பாளையம் காளியம்மன் கோவிலில் தங்க, வெள்ளிச் சங்கிலிகளையும் கொள்ளையடித்தது தெரியவந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், திருடப்பட்ட பொருட்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதான நித்தீஷ், ஆர்யா, சஞ்சய்.
மேலும்
-
பட்டா வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
-
தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
'ஒர்க் பிரம் பார்க்' திட்டம் துபாயில் அமல்; பூங்காவில் உட்கார்ந்து ஆபீஸ் வேலை!
-
ஜிபிஎஸ் காலர் பொருத்தி இருந்தாலும் விலங்குகளை உடனுக்குடன் கண்டறிவது சிரமம்!
-
இந்தியாவின் முதல் சூரியசக்தி கிராமம்; 141 வீடுகள், 282 கிலோவாட் பயன்பாடு, மின் கட்டணம் பூஜ்ஜியம்!
-
மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3 ஆயிரம் கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் விஜய்