விடியல் ஆட்சியில், விடியலே இல்லாததால் தான் மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்; அமைச்சர் ரமேஷ் விமர்சனம்
திருச்சியில் நிருபர்களிடம் அமைச்சர் ரமேஷ் கூறியதாவது: தி.மு.க.,வினர் அரசியல் செய்வதற்காக, எது வேண்டுமானாலும் பேசுவார்கள். 'தமிழகத்தில் எங்குமே பாதுகாப்பு இல்லை' என்று முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
'விடியல் ஆட்சி' என்ற பெயரில் அவர் நடத்திய ஆட்சியில், விடியலே இல்லாததால் தான், மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர்.
ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் நிர்வாகம், திருச்சி மாநகராட்சிக்கு 3 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டியுள்ளது. அது குறித்து மாநகராட்சி ஆணையருடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இரு தரப்பிலும் பேச்சு நடத்தி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காணப்படும். மழை காரணமாக, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ராஜகோபுரத்தில் ஒரு சில இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து உள்ளது. அந்த இடத்தை, அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கோபுரத்தை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தம்பி ரொம்ப பேசறீங்க. விஜய் வச்சு தான் உங்களுக்கு ஓட்டு.நீங்க minority அரசாங்கம் தான்.தயவு செய்து வேலையை பாருங்கள்.லஞ்சம் பரவுகிறது. Fluke ல வந்துட்டீங்க. அத யூஸ் பண்ணி மக்களுக்கு நல்லது செய்தால் நீங்கள் மீண்டும் வரலாம்.
வெட்டி சாரி வெற்றி கூட்டணிக்கும் விடியல் கதை தான்.
இப்படியே பேசிகிட்டே இருந்தால் நீங்களே விரைவில் வீட்டுக்கு போக வேண்டி வரும். தெரியாமல் ஓட்டு போட்டு உங்களிடம் நாங்கள் அவதிப் படுகிறோம்! ஒழுங்காக அமைச்சர் வேலையை மட்டுமே செய்யுங்கள்! திமுகவை பலப்படுத்த அவர்களுக்கு உங்கள் உதவி தேவையில்லை!
நடப்பை திருத்தி கோள்ளவில்லை என்றால் உங்களுக்கும் அதேகதிதான் என்று பஞ்ச படசி கூறுகிறது ஜாக்கிரதை
ரெண்டு பேரும் தமிழகத்தை முடியலுக்கு தான் கொண்டு சென்று இருக்கிறீர்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்
ஆட்சியில் இல்லாமல் காய்ந்து போய்க்கிடந்தவர்களுக்கு பணம் மழை போல கொட்டியதால் வந்த விடியல் - அதை எப்படி விடியல் இல்லை என்று சொல்ல முடியும்?
வேற்று மதத்தினரை கோவிலுக்கு அழைத்துவருகிறார் என்று வருத்தப்படாதீர்கள் .வேற்று மதத்தினரை நம் கோவிலுக்குள் கொண்டுவந்து இந்துக்களாக மாற்றத்தான் அவர் பாடுபடுகுறார் என்று பாராட்டுங்கள் .வேற்று மதத்தினர் எனக்கு ஹிந்து கடவுள் மீது நம்பிக்கை உள்ளது என்று கூறித்தான் உறுதிமொழி எடுத்து உள்ளே அனுமதிக்கப்படுகிறார் .உங்களுக்கு இதில் என்ன வருத்தம் .
மற்ற மதத்தினரை இந்துக்களாக மதம் மாற்றுகிறரர் .வாழ்த்துங்கள் .
இந்த ஆள் ஒரு அரசியல் கற்றுக்குட்டி. ஐந்து வருஷம் வாயை மூடிக்கொண்டு இருப்பது இவருக்கு பெருமை சேர்க்கும்.
எல்லாம் கிருபை கிருபை. அலேலுயா
அமைச்சர் ரமேஷ் அவர்களே, உங்களது அபிமான தலைவர் தந்தை பெரியாரின் பேரனை நீங்கள் தரம் தாழ்த்தி பேசக்கூடாது. ஸ்ரீரங்கம் கோவில் வாயிலில் அமர்ந்து நித்யமும் அரங்கநாத பெருமாளை சேவித்துக்கொண்டே இருக்கும் உங்கள் தலைவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவியுங்கள், கௌரவியுங்கள்.மேலும்
-
ஓடைகள் சீரானால் பாதிப்புகள் குறையும்
-
நிறுவன கணக்கில் ரூ.80 கோடி மோசடி சென்னை நபரிடம் போலீசார் விசாரணை
-
ஐரோப்பாவிற்கு நேரடி புதிய விமான சேவை முன்னணி நிறுவனங்களுடன் அதிகாரிகள் பேச்சு
-
தினமலர் செய்தி எதிரொலி ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலம் அளவீடு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு125 நாள் பணி வழங்க அதிகாரிகள் மறுப்பு
-
பள்ளி நேரத்தை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்: அன்பழகன்