மழைநீர் வடிகாலை துார்வாரி சீரமைக்க மக்கள் கோரிக்கை
சாலவாக்கம்: கருவேப்பம்பூண்டி கிராமத்தில், மழைநீர் வெளியேறும் வடிகாலில் வளர்ந்துள்ள களைச்செடி, மண் திட்டுக்களை அகற்றி, சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், கருவேப்பம்பூண்டி பகுதியில், மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால் உள்ளது. இந்த, வடிகாலை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், களைச்செடி மற்றும் மண் திட்டுக்களால் துார்ந்து உள்ளது. இதனால், மழைநீர் வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்குவதால், பாசி படர்ந்து உள்ளது.
எனவே, வடிகாலில், வளர்ந்துள்ள களைச்செடி மற்றும் மண் திட்டுக்களை அகற்றி, மழைநீர் விரைந்து வேளியேறும் வகையில் வடிகாலை சீரமைக்க, கருவேப்பம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement