களைசெடிகள் வளர்ந்துள்ள பூங்கா: மாநகராட்சி நிர்வாகம் பாராமுகம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் செவிலிமேடு, குருசாமி நகரில், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால், களைசெடிகள் வளர்ந்து சீரழிந்துள்ளது. எனவே, பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு குருசாமி நகரில் 2016 - 17ல், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 43.91 லட்சம் ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது.
இதில், அழகிய செயற்கை நீரூற்று, சிறுவர்களுக்கான சீசா, ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், இரவில் ஒளிரும் மின்விளக்கு, நடைபயிற்சிக்கான நடைபாதை, அழகிய புல் தரை, அமர்வதற்கான இருக்கைகள் என வசதி பல்வேறு வசதி ஏற்படுத்தப்பட்டன.
இந்த பூங்காவை குருசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால், சிறுவர் - சிறுமியர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. மேலும், பூங்கா முழுதும் களை செடிகள் அதிகளவில் வளர்நதுள்ளன.
களை செடிகளுக்குள் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடைந்துள்ளன. இதனால், அப்பகுதி மக்கள் பூங்காவை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
இதன் காரணமாக, லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, செவிலிமேடு குருசாமி நகரில் பயன்பாடின்றி சீரழிந்து வரும் பூங்காவை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என. குருசாமி நகர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு: குறைந்தபட்சம் ரூ.50; கூடுதல் கி.மீ.,க்கு ரூ.25
-
சீனா ஆக்கிரமிப்பு குறித்து காங்., தவறான வீடியோ வெளியிட்டது அம்பலம்! மன்னிப்பு கேளுங்கள் என மத்திய அமைச்சர் ரிஜிஜு ஆவேசம்
-
மருத்துவ மாணவர்களுக்கு கிராமங்களில் கட்டாய சேவை: மத்திய அரசுக்கு கோர்ட் அட்வைஸ்
-
மகேஷை அடுத்து சிக்கப்போவது யார்?: திமுக மாஜிக்கள் கலக்கம்
-
புழல் சிறையில் மகேஷை சந்தித்தார் உதயநிதி, கட்சி நிர்வாகிகளிடம் கோபம்
-
கரையை கடக்கத் துவங்கியது அர்னாப் புயல்! அதிகாலை 4 மணி வரை நீடிக்கும்