ஏன் கொண்டாடுகிறோம்?

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்னு தெரிஞ்சுக்கலாமா?

நரகாசுரன் சாதாரண அசுரன் இல்லை. பூமாதேவிக்கும், வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்தவன். அதனால பூமாதேவியை தவிர வேற யாராலும் அவனை கொல்ல முடியாதுன்னு வரம் வாங்கியிருந்தான். பிராக்ஜோதிஷபுரத்தை ஆண்ட அவன், தேவர்களிடம் இருந்து அதிதியின் காது குண்டலத்தையும், வருணனின் குடையையும் பறித்து, 16,100 கன்னிப் பெண்களை சிறை வைத்தான்.

தேவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட, கிருஷ்ணர் தனது பட்டத்து ராணி சத்யபாமாவுடன் கருடன் மேல் புறப்பட்டார். ஏன்னா சத்யபாமா தான் பூமாதேவியின் அம்சம். போரில் நரகாசுரன் ஏவிய பாணத்தால் கிருஷ்ணர் மயங்குவது போல் நடிக்க, கோபம் கொண்ட சத்யபாமா தனது வில்லால் நரகாசுரனை வீழ்த்தினாள். சாகும் போது நரகாசுரன் கேட்ட வரம் தான், என் மரண தினத்தை மக்கள் மங்களகரமாக, தீபங்கள் ஏற்றி கொண்டாட வேண்டும்னு. அது தான் நரக சதுர்த்தசியாக, ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் நாம் கொண்டாடும் தீபாவளி. தென்னிந்தியாவில் இதுவே பிரதானம்.

Advertisement