புதிய மின்கம்பங்களில் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம்
செய்யூர்: வடக்கு செய்யூர் கிராமத்தில், புதிய மின்கம்பங்கள் மாற்றி அமைத்து நான்கு மாதங்களாகியும், மின் இணைப்பு வழங்காமல் வாரிய அதிகாரிகள் அலட்சியத்துடன் செ யல்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில், உள்ள மின்கம்பங்கள் நல்லுார் துணை மின் நிலையம் மூலம், பராமரிக்கப்பட்டு வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளன. அவற்றை மாற்றி அமைக்க மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, நான்கு மாதங்களுக்கு முன், சேதமடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டன.
தற்போது வரை பழைய, புதிய மின்கம்பங்களுக்கு மின்இணைப்புகள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பருவ மழையின்போது சேதமடைந்த மின்கம்பங்கள் சாய்ந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் பஜனை கோவில் தெரு மற்றும் குடியிருப்பு பகுதிகளில், மின்கம்பிகள் தாழ்ந்து செல்கின்றன.
பலத்த காற்று வீசும்போது மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி, தீப்பொறிகள் கூரைவீடுகளின் மீது விழுகின்றன. இதனால் வீடுகள் தீப்பற்றி எரியும் நிலை உள்ளது.
எனவே, மின்வாரிய அதிகாரிகள், ஆய்வு செய்து, புதிய மின்கம்பத்தில் மின் இணை ப்பு வழங்கவும், தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை, உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
' புகையிலை இல்லா இளைஞர்கள்: ஆரோக்கியமான நீலகிரி ': திட்டத்தை செயல்படுத்த ஒத்துழைப்பு அவசியம்
-
அடுத்தடுத்து நான்கு காட்டு யானைகள் உயிரிழப்பு: நீலகிரி வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
-
எஸ்ஐஆர் பணியால் போலி வாக்காளர்கள் நீக்கம்; ராகுல் குற்றச்சாட்டுக்கு கர்நாடகா காங்., அமைச்சர் எதிர்ப்பு
-
8 புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, சமூக நீதி ஆணையம் அமைக்கப்படும்; தமிழக அமைச்சரவை முடிவு
-
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்; இஸ்ரோ தலைவர்
-
மக்களின் தேவை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்