மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிவோர் புரிவோருக்கு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிபவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பத்மஜா செய்திகுறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, உலக மாற்றுத்திறனாளிகள் தினமான வரும் டிசம்பர் 3ம் தேதி, முதல்வரால் மாநில விருதாக 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிலும் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் இருவருக்கு ெஹலன் கெல்லர் விருது வழங்கப்படுகிறது.
அதேபோல் அறிவு சார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியருக்கும், சிறந்த சமூக பணியாளருக்கும் விருது வழங்கப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 2 விருது வழங்கப்படுகிறது.
பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைகப்புகளை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என 2 விருது வழங்கப்பட உள்ளது.
விருதுக்கு tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் 2 நகல்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
யமுனை நதி நீர் சுத்தம்; குடித்துக்காட்டிய எம்.பி.,
-
குறைகேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் இல்லை வெளிநடப்பு செய்த தர்மபுரி விவசாயிகள்
-
ஏ.ஆர்.ஆர்.எஸ்., சில்க்ஸில் தீபாவளி கொண்டாட்டம்
-
விலைவாசி உயர்வு உச்சம், ஹிட்லர் ஆட்சி இதுதான் த.வெ.க., அரசின் சாதனை: முனுசாமி
-
கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை
-
கள்ளக்காதல் பிரச்னையால் முன்விரோதம் வியாபாரி கொலையில் 5 பேருக்கு காப்பு