கறவை மாடு திருடியவருக்கு போலீசார் வலை

மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த கொசப்பட்டியை சேர்ந்தவர் குமார், 56, விவசாயி; இவர், கறவை மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த, 27ம் தேதி இரவு மாடுகளை தனது வீட்டின் முன்கட்டி விட்டு துாங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு, 1:00 மணிக்கு மாடுகள் கத்தும் சத்தம் கேட்டு குமார் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கட்டியிருந்த, 4 மாடுகளில், ஒரு மாட்டை காணவில்லை. அக்கம், பக்கம் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து புகார்படி மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். ஏற்கனவே, தம்பிசெட்டிப்பட்டி மற்றும் அரூர் பகுதியில், 10க்கும் மேற்பட்ட மாடுகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement