ஊராட்சி பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி மற்றும் பிரம்மகுண்டம் ஊராட்சிகளில் நலத்திட்ட பணிகளை கலெக்டர் பத்மஜா ஆய்வு மேற்கொண்டார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வட பொன்பரப்பி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நடைபெற்று வரும் 'விபி ராம்ஜி' திட்டப் பணிகளையும், பிரம்ம குண்டம் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் சத்துணவு சமையல் கட்டடத்தையும் ஆய்வு செய்தார்.

மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி, அழகுராஜா, பொறியாளர் ஹரி கிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் ஹாரன், ஊராட்சி செயலாளர்கள் பழனி, சங்கர் உடனிருந்தனர்.

Advertisement